புதன், 18 செப்டம்பர், 2019

பொது குழு கூட்டம் 2019

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின்
பொது குழு கூட்டம்  2019 ஆகஸ்ட் 18 அன்று  பந்தலூரில் நடைப்பெற்றது.

கூட்டத்திற்கு வந்தோரை  இணை செயலாளர் பொன். கனேசன் வரவேற்றார்.
கூட்டத்திற்கு தலைமை  தலைவர்  காளிமுத்து  தலைமை தாங்கினார்.   கடந்த 2018 / 19 ம் ஆண்டின்  செயல்பாடுகள், மற்றும்  எதிர்கால  செயல்பாடுகள் குறித்து  பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம் பேசினார்.   வரவு செலவு அறிக்கையின் பொருளாளர் ஜெயசந்திரன் சமர்ப்பித்தார்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள்

நன்றி தெரிவித்தல்

            இதுநாள் வரை அமைப்பின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் ஆதரவு அளித்து பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தந்த  அரசு துறைகள் மற்றும் தொடர்ந்து அமைப்பின் செயல்பாட்டிற்கு ஆதரவு தந்து உதவும் சமூக நல அமைப்புகள், நுகர்வோர் கூட்டமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், பத்திரிக்கையாளர்கள், மற்றும் தன்னார்வ அமைப்புகள் அனைத்திற்கும் அமைப்பின் பொது குழு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அமைப்பின் செயல்பாடு அறிக்கை மற்றும் பொருளாளர் அறிக்கைகள் எற்றுக்கொள்ளுதல் என தீர்மாணிக்கப்பட்டது.

அமைப்பின் செயல்பாடுகள் குறித்த தீா்மாணங்கள்

1.      அமைப்பின் செயல்பாடுகளை மேம்படுத்துதல், புதிதாக நுகர்வோர் ஆர்வலர்களை உருவாக்குதல் மற்றும் நுகர்வோர் அமைப்புகளை உருவாக்குதல் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.

2.      பள்ளி கல்லூரிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை வழிநடத்தி  நுகர்வோர் சுற்றுச்சூழல் மற்றும் இதர விழிப்புணர்வு பணிகளை மேற்க்கொள்ளுதல் மற்றும் நுகர்வோர் மன்றங்கள் அமைக்காத பள்ளிகளில் நுகர்வோர் மன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்தல் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.

3.      கல்வி வழிகாட்டலுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் நடத்தி சரியான கல்வி பெற வழிகாட்டுதல் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.

4.      இரத்த தான முகாம் நடத்துதல், இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்துதல், இலவச மருத்துவ முகாம் நடத்துதல் அதற்கான சுகாதார துறை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுதல் என தீர்மாணிக்கப்பட்டது.

5.      உறுப்பினர்கள் சந்தா மற்றும் நன்கொடைகள் மூலம் நிதி ஆதாரம் பெருக்குதல் என தீர்மாணிக்கப்பட்டது.





அரசு துறைகள் சார்பான   கோரிக்கைகள் சார்ந்த தீர்மாணங்கள்

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை

1.      நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாகவும், மழை அதிகம் பொழியும் மாவட்டமாகவும் உள்ளது.  இதனால் இங்கு அதிக அளவு எரிபொருள் தேவை உள்ளது.  இதனால் மலை மற்றும் மழை மாவட்டமான நீலகிரிக்கு கூடுதல் மண்ணென்னை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாதந்தோறும் வழங்கும்  மண்ணென்னை  அளவு குறித்து தகவல்  முன்கூட்டி தெரியபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளல்.

2.      உணவு கலப்படம் மற்றும் கலாவதி உணவுகள் குறித்த முறையான ஆய்வுகளை உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொள்வதில்லை.  இதனால் பல இடங்களில் காலாவதி உணவுகள் அதிகரித்து காணப்படுகின்றது.  இதுகுறித்து உணவு துறையினர் மூலம் உரிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டல்

3.      நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளர்கள் முதல் சிறு குறு விவசாயிகள் ரேசன் அரிசியை மட்டுமே நம்பியுள்ளனர்.  இவர்களுக்கு கடைகளில் அரிசி வாங்கி பயன்படுத்தும் வழக்கம் மிகவும் குறைவே.  எனவே மாதந்தோறும் முழு அளவு அரிசி ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்வதுடன் .  கூடலூர் பந்தலூர்  பகுதியில் அதிக அளவு பச்சரிசி பயன் படுத்துகின்றனர்.  எனவே  பச்சரிசி  ரேசன் கார்டுக்கு சுமார் 5 கிலோ வரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

4.      அதுபோல கோதுமை அதிக அளவு தேவை படுகின்றது.  முன்பு ஒரு கிலோ கோதுமை ரூபாய் 7.50 வீதம் 5 கிலோ வரை வழங்கப்பட்டது.  பலரும் பயன் பெற்று வந்தனர்.  தற்போது அரிசிக்கு பதில் கோதுமை என்பதால் பலருக்கு அரிசியும் பற்றாக்குறை நிலவுகின்றது.  எனவே முன்பு போல் கோதுமை  தனியாக ஒரு கிலோ ரூபாய் 10/-வீதம் குறைந்தபட்சம் 5 கிலோ வரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

5.      ஸ்மார்ட் அட்டைகள் தொலைந்தவர்கள் புதிய அட்டை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.  இதனால் ரேசன் பொருட்கள் வாங்கவும் இயலாமல் அவதிப்படுகின்றனர்.  எனவே மாவட்ட அளவில்  தொலைந்த ஸ்மார்ட் கார்டிற்கு பதில் புதிய ஸ்மார்ட் கார்ட் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
6.           
7.      நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தின் தலைவர் பதவி காலியாக உள்ளதால் நுகர்வோர் சார்ந்த வழக்குகள் தேங்கி வருகின்றன.  இதனால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டபடியான தீர்வு உரிய காலத்தில் பெற இயலாமல் நுகர்வோர்கள் பாதிக்கப்படுகின்றனர்.  எனவே காலியாக உள்ள தலைவர் பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.



சுகாதார துறை

1.      பந்தலூர் கூடலூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு சிறப்பு பிரிவுகள் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தமைக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.  அதுபோல

2.      கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் தற்போது புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றது.  இதனால் பலரும் நோயினை கண்டிறிய முடியாமல் முற்றிய நிலையில் சிகிச்சை பெற இயலாமல் பாதிக்கப்பட்டு கடும் அவதிக்குள்ளாகி இறந்து வருகின்றனர் என்பது வேதனையானது.

3.      எனவே கூடலூர் பந்தலூர் அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை பிரிவும், சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் டயாலிசீஸ் பிரிவும் தொடங்கி செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

4.      அதுபோல பந்தலூர் மற்றும் இரத்த பரிசோதகர்கள் பற்றாக்குறை நிலவுகின்றது.  பந்தலூர் அரசு மருத்துவமனையில் தற்போது காசநோய்  டெக்னீசியன் தான் அனைத்துவித இரத்த பரிசோதனை மேற்க்கொள்கிறார்கள்.  ஆனால் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை ரிப்போர்ட் கிடைப்பதில்லை.  இதனால் நோயாளிகள் பாதிக்கும் நிலையும் உள்ளது.  கூடலூர் அரசு மருத்துவமனையிலும் இரத்த வங்கி மற்றும் உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் என பல்வகை இரத்த மாதிரிகள் பரிசோதிக்க ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார்.  எனவே கூடுதல் இரத்த பரிசோதகர் கூடலூர் மற்றும் பந்தலூர் அரசு மருத்துவமனையில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5.      எனவே பந்தலூர் அரசு மருத்துவமனையில்   அவசர  சிகிச்சை  மேற்க்கொள்ள தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  குடும்ப கட்டுபாட்டு அறுவை சிசிக்சை ஏற்கனவே மேற்கொண்டது போல் மாதம் இரு முறை மேற்க்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6.      மாத்திரைகள் வழங்கும்போது மாத்திரைகளுக்கான சீட்டுகள் வழங்க வேண்டும்

7.      பிரசவம் பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தாய்மார்களுக்கு ஸ்கேன் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

8.      எக்ஸ்ரே இயந்திரம் நவீனமயமானதை வாங்கி கொடுத்து மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9.      அவசர சிகிச்சைகளுக்கு இதர மருத்துவமனைகளுக்கு அனுப்புவதற்கான காரணங்களை ஆய்வு செய்து அக்குறைகளை நிவர்த்தி செய்து இங்கேயே தரமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10.  பந்தலூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






நெடுஞ்சாலை துறை சார்பான      கோரிக்கைகள்

பந்தலூரில் இருந்து கேரளா செல்லும் வகையில் கிளன்ராக்  வழியாக வனப்பகுதியில் சென்று கேரளா மாநிலம் முன்டேறி பகுதியில் இணையும் சாலை உருவாக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில இணைப்பு பகுதியாக உள்ளது.  இதில் கீழ்நாடுகானி பகுதியில் செல்லகூடிய தமிழ்நாடு கேரளா இணைப்பு சாலை சமீபத்தில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக  சாலை பழுதடைந்து உள்ளது.  அடிக்கடி சாலை துண்டிக்கப்படுவதால்  மக்கள் போக்குவரத்துக்கு சிரம்ப்படும் நிலை உருவாகியுள்ளது. 

எனவே மாற்று நடவடிக்கையாக பந்தலூர் கிளன்ராக் பகுதியில் இருந்து கேரளா மாநிலம் முன்டேறி வழியாக செல்லும் சாலை தற்போது சிறிய நடைபாதையாக உள்ளது.  இந்த சாலையை அகலப்படுத்தி பெரிய வாகணங்கள் செல்லும் வகையில் தார்சாலையாக மாற்றி தந்தால் இருமாநில போக்குவரத்துக்கு உதவியாக அமையும்.  இந்த சாலை அமைக்க ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது.

எனவே மேற்படி சாலையை உருவாக்கி இருமாநில போக்குவரத்துக்கு  உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

பந்தலூர் உப்பட்டி பொன்னானி வழியாக பாட்டவயல் செல்லும் சாலையில் ஏராளமான வாகணங்கள் வந்து செல்கின்றன.  இச்சாலையை அகலப்படுத்தி போக்குவரத்துக்கு உதவியாக அமைத்து தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


சாலைகளில் பல்வேறு இடங்களில் மண்சரிவுகள் சாலை சேதங்கள் ஏற்பட்டள்ளது.  இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று சாலைகள் உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

நூலக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி

பந்தலூர்
பந்தலூர் தாலுக்கா அத்திக்குன்னா அரசு உயர்நிலை பள்ளியில்  மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பந்தலூர் கிளை நூலகம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் அத்திக்குன்னா அரசு உயர் நிலைப்பள்ளியில் புத்தக வாசிப்பு மற்றும் நூலக விழிப்புணர்வு முகமும், 150 மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவும் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அமர்நாத் தலைமை தாங்கினார்.

பள்ளியின் முன்னாள் மாணவரும், கோவை அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியருமான செந்தூரன் பேசும்போது  கல்வியோடு மாணவர்கள் விளையாட்டு, பொது அறிவு ஆகிவற்றை வளர்த்து கொள்ள வேண்டும்.  முன்பெல்லாம் மாணவர்கள் பல்வேறு புத்தகங்களையும், தினசரி செய்தித்தாள்களை படித்து தான் எங்களின் அறிவையும், நாட்டுநடப்புகளை அறிந்து கொண்டோம்.  ஆசிரியர்களின் மனதில் இடம் பிடித்தவர்களால் பலரும் சாதனையாளர்களாக உருவாகி உள்ளனர்.  ஆசிரியர்களை, பெரியவர்களை மாணவர்கள் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். போட்டிகள் நிறைந்த உலகில் படிப்பறிவோடு, பொது அறிவு, இதர திறமைகளை வளர்த்து கொள்தல் அவசியம் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து கற்றுக்கொள்வதால் தன்னுடைய வாழ்க்கை நிலையை மேம்படுத்தி கொள்ள முடியும், நல்லவைகளை விட தீயவை அதிகம் நிறைந்த உலகில் நல்லவைகளை ஏற்று கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது  வாசிப்பு பழக்கம் மனதை வலுப்படுத்தும்,  பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் உதவும், படிப்பு அறிவு மட்டும் வேலைவாய்ப்பை தருவதில்லை,  எல்லா துறைகளிலும் போட்டி தேர்வுகள் மூலமே பணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.  எனவே போட்டி தேர்வை எதிர்க் கொள்ள மாணவர்களை தங்கள் தயார்படுத்தி கொள்ள பொது அறிவை வளர்த்து கொள்ள நூலக அட்டை வழங்கப்படுகிறது.  இவற்றை முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

கிளை நூலகர் அறிவழகன் பேசும்போது  இதுவரை 2000த்திற்கும் அதிகமான மாணவர்களை பந்தலூர் கிளை நூலகத்தில் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது.  மாணவர்கள் நூலகத்தை வெள்ளி மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து பயன்படுத்தி கொள்ள முடியும்.  
புத்தகங்கள் பல்வேறு கதைகள் பொது அறிவுகள், அறிவியல் நூல்கள், மாத இதழ்கள் என் பல்வேறு நூல்கள் உள்ளன அவற்றை எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.

150 மாணவர்களுக்கான உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நூலக உதவியாளர் மூர்த்தி,  பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர். 

புதன், 15 மே, 2019

மின் குறைபாடு பணியாளர் நியமிக்க வேண்டும் என கோரிக்கை

பெறுனர்

மான்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
தமிழ்நாடு அரசு சென்னை

உயர்திரு தலைவர் அவர்கள்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
சென்னை

பொருள்


:         நீலகிரி மின் பகிர்மான வட்டம் போதிய மின் ஊழியர்கள் இல்லாததினால்

மின் சீரமைப்பு பணிகள் பாதிப்பு  விரைவில் பணியாளர்கள் நியமிக்கவும்,
தற்காலிக பணியாளர்கள் நியமித்து பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க கேட்டல் சார்பாக. 


மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு

        வணக்கம்,  நீலகிரி மாவட்டத்தில் மின்சார பகிர்மான வட்டத்தின் சிறப்பான பணிகளால் மின் பயனாளிகள்  சிறப்பான சேவையை பெற்றனர். ஆனால் தற்போது மின் சேவையில் சுணக்கம் காணப்படுகின்றது.

மின்பகிர்மான வட்டத்தில் போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் மின் பழுதுகளை விரைவாக சீரமைக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது கடந்த வாரங்களில் மே 10 மற்றும் 11ம் தேதிகளில் பெருமழை பெய்தது. இதில் காற்று அதிகமாக தாக்கியதில் மின் கம்பங்கள் பழுதடைந்தது. அதுபோல் மின் வழித்தடங்களில் பல சேதராங்கள் ஏற்பட்டன.

இந்த பாதிப்புகளை சரி செய்ய போதிய ஆட்கள் இல்லாத நிலையால் தற்போது வரை மின் சீரமைப்பு பணிகள் முடிவடையாமல் பல குடும்பங்கள் மின்சார வசதியின்றி தவித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் மின் வழித்தடங்கள் உள்ளன.  இவை பெரும் காற்றில் மரங்கள் முறிந்து விழுவதாலும்,  காற்றின் வேகத்திற்கு தாக்குபிடிக்க முடியாத நிலையாலும் சேதமடைகின்றன.


கடந்த காலங்களில் கூடுதல் பணியாளர்கள் இருந்தபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்க்கொண்டனர்.  ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றினார்கள்.


இதனால் மழை மற்றும் புயலின் தாக்கங்களினால்  மின் துண்டிப்பு மிகவும் குறைவாகவும் விரைவான சீரமைப்புகளும் இருந்தது.


ஆனால் தற்போது உள்ளூர் பணிகளை பார்க்கவே போதிய மின் ஊழியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு மின் வாரிய அலுவலகத்திற்கு ஒன்றிரண்டு லைன்மேன்


அதுபோல மின் வாரிய உதவி மின் பொறியாளர் பணியிடங்களே பெரும்பாலும்

காலியாக உள்ளது.


அதுபோல் களப்பணியில் உள்ள மின்சார ஊழியர்கள் பெருமளவு குறைவாக உள்ளதால்

மின்சார குறைபாடுகளை களையும் நிலையில் மிகவும் சுணக்கம் ஏற்படுகின்றது.


2003 தமிழ்நாடு மின்சார சட்டப்படியும், 2004  தமிழ்நாடு மின் பகிர்மான விதி தொகுப்பின் படியும் தமிழ்நாடு மின்சார மின்சார ஒழுங்கு முறை ஆணைய விதிகள் படியும் மினி்இணைப்பு கேட்கும்போது வழங்குதல் மற்றும் மின் மாற்றிகள், மின் வழங்கல் மற்றும் இதர சேவைகள் உரிய காலத்தில் வழங்க இயலாத

நிலை உள்ளது.


அதுபோல மின் தடங்கல்கள்  ஏற்படும்போது மலைபிரதேசங்களில் 12 மணி நேரத்திற்குள் மின் தடங்கல்கள், மின்மாற்றியில் உள்ள தாழ்வழுத்தம் போன்றவை சர செய்ய வேண்டும் எனவும் மின் நுகர்வோரின மின் மாற்றியில் உள்ள குறைபாடுகளை 48 மணி நேரத்தில் சரி செய்ய வேண்டும் என்ற விதிகளை சரியாக செயல் படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மின் இணைப்பு பெற்ற பல தர நுகர்வோர்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.


எனவே மின்சாரத்தை நம்பியே இன்றைய அனைத்து வித பணிகளும் உள்ளதால் இந்த

சேவை முறையாக  மக்களுக்கு கிடைக்க முதற்கட்டமாக போதிய பணியாளர்கள் தேவை

என்பதை உணர்ந்து போதிய மின்கள பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க

வேண்டும் என் கேட்டுக்கொள்கின்றோம்.


நீலகிரி மின் பகிர்மான வட்டத்தில்  புயலினால் மரங்கள் மின் கம்பிகளில் விழுந்து மின் வினியோக பணிகள் மிகவும்  பாதிக்க படும் நிலை உள்ளது.   இதனால் பல்வேறு கிராமங்கள் மின் சேவை பெற இயலாத நிலை ஏற்படும்.


தற்போது  தற்காலிக பணியாளர்கள் நியமிக்கும் பட்சத்தில் மின்வழித்தடங்களில் மின் தடை ஏற்படுத்தாக வகையில் முன்னெச்சரிக்கை

நடவடிக்கைகள் மேற்க்கொள்ள இயலும் இதானல் மின்தடை தவிர்க்க மின் பகிர்மான பொருட்களின் சேதங்கள்  தவிர்க்க உதவும்


மின் ஊழியர்கள் நியமிக்கும் வரை தற்காலிக மின் பணியாளர்கள் குறைந்தபட்ச மாத சம்பளத்தில் நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.    



நகல்   உயர்திரு. முதன்மை பொறியாளர் அவர்கள்                                      
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சென்னை
உயர்திரு. தலைமை பொறியாளர் அவர்கள் கோவை
உயர்திரு. மேற்பார்வை பெறியாளர் அவர்கள் உதகை.

இப்படிக்கு

சு. சிவசுப்பிரமணியம்
பொது செயலாளர்.  CCHEP. Nilgiris

புதன், 27 மார்ச், 2019

25% இட ஒதுக்கீடு

 ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை: ஏப். 22 முதல் விண்ணப்பிக்கலாம்

பொருளாதார அளவில் நலிவடைந்தோர் தங்களது குழந்தைகளை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு அல்லது எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்க வரும் ஏப். 22-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

இது குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான இயக்குநர் எஸ்.கண்ணப்பன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு

பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பெற முடியாத சூழ்நிலை இருந்து வந்தது

இதையடுத்து கடந்த 2009-ஆம் ஆண்டு இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. 

அனைத்து தனியார் பள்ளிகளிலும் எல்.கே.ஜி. சேர்க்கையில் 25 சதவீத இடஒதுக்கீட்டை ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே அந்தச் சட்டம் ஆகும்.

அதன்படி  தமிழகத்தில் 2013-2014-ஆம் கல்வி ஆண்டில் இருந்து, ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

வரும் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற ஏப்.22-ஆம் தேதி முதல் மே 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

விண்ணப்பம் செய்பவர்கள் குழந்தையின் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ் போன்றவற்றை இணைக்க வேண்டும்.

எங்கு விண்ணப்பிக்கலாம்?

இணைய வசதி இல்லாதோர் முதன்மைக் கல்வி அலுவலர்,
மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான ஆய்வாளர் அலுவலகம், 
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், 
மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், 
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், 
அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களிலும் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால், பெற்றோர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். இந்த விண்ணப்பங்களைப் பள்ளியிலேயே இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம் அல்லது ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள இடங்களில் இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம்.

ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் வெளிப்படையான முறையில் குலுக்கல் நடத்தி மாணவர் தேர்வு செய்யப்படுவர்.

அந்தந்த பள்ளிகளில் குறிப்பிட்ட நாள் அன்று நடத்திடும் குலுக்கல் நிகழ்வுகளை கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் நியமிக்கும் இதர அரசுத் துறை அதிகாரிகள் கண்காணிப்பர்.

கடந்த ஆண்டு எந்தெந்தப் பள்ளியில் எவ்வளவு இடங்கள் உள்ளன என்ற விவரங்களை http://www.dge.tn.gov.in/  என்ற இணையதளப் பக்கத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

 

திங்கள், 4 பிப்ரவரி, 2019

ஹேர் டை ஆபத்து" அறிவோம்.


ஹேர் டை ஆபத்து" அறிவோம்.

நமது உடலில் சுரக்கும் ‘மெலனின்’ என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம். 

40 வயதுக்கு மேல், இந்த நிறமிகளை ‘டிரையோஸின்’ என்ற என்ஸைம் தடை செய்கிறது. 

இதனால் முடி நரைக்கிறது. சிலருக்கு இளமையிலேயே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கமும் மன அழுத்தமும் மற்றொரு காரணமாக உள்ளது.

இளநரை:

இளநரை ஒருசில குடும்பத்தில் தொடர்ச்சியாக பாதிக்கும். அதாவது பாட்டி, அம்மா, பேத்தி எல்லாருக்குமே சின்ன வயதிலேயே நரை வந்ததாகச் சொல்வார்கள்.
இது அவர்களுடைய மரபணுக்களில் உள்ள ஒரு சின்ன குறைபாடு. 

அவர்களுடைய மெலனோசைட்கள் 30 முதல் 40 வயது வரை சுறுசுறுப்பாக வேலை செய்யாமல் 20 வயதிலேயே சோர்ந்து வேலை செய்வதை நிறுத்தி விடுவதால் இளநரை உண்டாகிறது.

சுற்றுச்சூழல் மாசுக்களால் தலையில் படியும் தூசி, தலையில் எண்ணெயே வைக்காததால் ஏற்படும் வறட்சி போன்றவையும் இளநரைக்கு காரணம். 

இதனை மறைப்பதற்காக, நாம் பயன்படுத்தும் தலைமுடி சாயத்தில் சில்வர், மெர்குரி, லெட் போன்றவை உள்ளது. தொடர்ந்து ரசாயனம் கலந்த தரமற்ற தலைமுடி சாயத்தை பயன்படுத்தும்போது கூந்தல் வறண்டு போய், முடி உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை ஏற்படும். 

வழுக்கை விழவும் வாய்ப்புகள் அதிகம்.ஒரு சிலருக்கு ரத்த சோகையினால் கூட ஏற்படலாம். இரும்புச்சத்து குறைபாடு, செம்புச்சத்து குறைபாடு(Copper), புரதச்சத்து குறைபாடுகளும் முடியை வெள்ளையாக்கலாம். 

இவ்வாறு சத்து குறைபாட்டினால் வரும் வெள்ளை முடியானது, அந்த சத்துகளை நாம் கொடுக்கும்போது கருப்பாக மாறும். சில வகை மாத்திரைகளை உட்கொள்வதும் முடியை வெள்ளையாக்கலாம்.
 (எ.கா: Chloroquine, Phenylthiourea, Triparanol போன்ற மருந்து வகைகள்.) புகைப்பிடிப்பதாலும் சிலருக்கு இளநரை ஏற்பட காரணமாக இருக்கலாம்.

இப்போதைய இளைஞர்கள், மாணவர்கள், ஹைலைட்ஸ், ப்ரவுன், என முடியில் வெரைட்டி காட்டத் துவங்கி விட்டார்கள். உடையில் இருக்கும் வண்ணம் முடியிலும் வர வேண்டும் என உடை நிற ஷேடுகளை பயன்படுத்துகிறார்கள்.

 ஹேர் டை என்பது கருப்பு நிறம் மட்டும்தான். இளநரை மற்றும் நாற்பது வயதுக்கு மேல் தோன்றும் வெள்ளை முடி பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் ஹேர் டை தான் பயன்படுத்துவார்கள். 

டையில் அமோனியம் மற்றும் பெராக்சைடு கலக்கப்பட்டிருக்கும். ஹெவி டைக்காக கொஞ்சம் PPD சேர்த்திருப்பார்கள்.Para phenylene diamine என்பதின் சுருக்கம்தான் PPD.

 டை உபயோகிப்பவர்களுக்கு பொதுவாக அலர்ஜி ஏற்படுத்தும் காரணியாக இருப்பது இதுதான். 

பொதுவாக பாதுகாப்பு கருதி PPD-யின் அளவு டையில் 2% க்கு குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. 

ஆனால், நடைமுறையில் இது எந்தளவுக்கு எல்லா நிறுவனத்தின் தயாரிப்புகளிலும் பின்பற்றுகிறார்கள் என்பது சந்தேகமே. 

முடியின் இயற்கை வண்ணத்தை மாற்ற பயன்படும் இந்த ரசாயனக் கலவைகளை அடிக்கடி நாம் பயன்படுத்துவது நம்மை ஆபத்தில் கொண்டு நிறுத்தும்.

.''டை பயன்படுத்துவதால்... அலர்ஜியில் ஆரம்பித்து, ஹார்மோன் சமச்சீரின்மை, புற்றுநோய் வரை ஆபத்து நேரலாம்''

டைகளில் இருக்கும் பினலின்டயமின், அமோனியா, ஹைட்ரஜன் பெராக்ஸைடு போன்ற பல ரசாயனப் பொருட் கள்... நம் ஹார்மோன்களைச் சரியாக செயல் படவிடாமல் தடுக்கின்றன. 

இதன் காரணமாக வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு, ஒவ்வொரு வரின் உடல்நிலையைப் பொறுத்து ஒவ்வொரு விதமான பாதிப்பு ஏற்படும்.

 அலர்ஜி, உடம்பின் எதிர்ப்பு சக்தி குறைவது, கேன்சர், சிறுநீர்ப்பை கேன்சர் என்று பல பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மீசைக்கு டை அடிப்பதும் அதிகமாகவே இருக்கிறது. 

அப்படி அடிக்கும்போது சுவாசத்தின் வழியாக உள்ளே சென்று நுரையீரலை பாதிக்கக்கூடும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை. 

அதேசமயம், மீசைக்கு கீழே இருக்கும் தோல் வழியாகவும் அது உடலில் ஊடுருவும் என்பதை மறக்கவேண்டாம்''

இயற்கை டை!

அவுரி இலை - 50 கிராம், 
மருதாணி இலை - 50 கிராம், 
வெள்ளை கரிசலாங்கண்ணி - 50 கிராம்,
கறிவேப்பிலை - 50 கிராம்,
பெருநெல்லி (கொட்டை நீக்கியது) - 10 எண்ணிக்கை... 

இவை அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும். 
ஒரு மடல் சோற்றுக் கற்றாழையை மிக்ஸியில் அரைத்து (சிறுசிறு துண்டுகளாகவும் வெட்டி சேர்க்கலாம்). அரைத்து வைத்திருக்கும் அவுரி கலவையுடன் சேர்த்து, 
ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மிதமான தீயில் காய்ச்ச வேண்டும். 

கொதி நிலைக்கு வரும்போது இறக்கி வடிகட்ட வேண்டும். 
இதை பத்திரப் படுத்தி வைத்து, தினசரி தலைக்கு எண்ணெய் பூசுவது போல பயன்படுத்தலாம். 
நாளடைவில் முடியின் நிறம் மாறுவதோடு புதிதாகவும் முடி வளரும்.

சு. சிவசுப்பிரமணியம்
செயலாளர்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்.

ஹேர் டை ஆபத்து" அறிவோம்.


ஹேர் டை ஆபத்து" அறிவோம்.

நமது உடலில் சுரக்கும் ‘மெலனின்’ என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம். 

40 வயதுக்கு மேல், இந்த நிறமிகளை ‘டிரையோஸின்’ என்ற என்ஸைம் தடை செய்கிறது. 

இதனால் முடி நரைக்கிறது. சிலருக்கு இளமையிலேயே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கமும் மன அழுத்தமும் மற்றொரு காரணமாக உள்ளது.

இளநரை:

இளநரை ஒருசில குடும்பத்தில் தொடர்ச்சியாக பாதிக்கும். அதாவது பாட்டி, அம்மா, பேத்தி எல்லாருக்குமே சின்ன வயதிலேயே நரை வந்ததாகச் சொல்வார்கள்.
இது அவர்களுடைய மரபணுக்களில் உள்ள ஒரு சின்ன குறைபாடு. 

அவர்களுடைய மெலனோசைட்கள் 30 முதல் 40 வயது வரை சுறுசுறுப்பாக வேலை செய்யாமல் 20 வயதிலேயே சோர்ந்து வேலை செய்வதை நிறுத்தி விடுவதால் இளநரை உண்டாகிறது.

சுற்றுச்சூழல் மாசுக்களால் தலையில் படியும் தூசி, தலையில் எண்ணெயே வைக்காததால் ஏற்படும் வறட்சி போன்றவையும் இளநரைக்கு காரணம். 

இதனை மறைப்பதற்காக, நாம் பயன்படுத்தும் தலைமுடி சாயத்தில் சில்வர், மெர்குரி, லெட் போன்றவை உள்ளது. தொடர்ந்து ரசாயனம் கலந்த தரமற்ற தலைமுடி சாயத்தை பயன்படுத்தும்போது கூந்தல் வறண்டு போய், முடி உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை ஏற்படும். 

வழுக்கை விழவும் வாய்ப்புகள் அதிகம்.ஒரு சிலருக்கு ரத்த சோகையினால் கூட ஏற்படலாம். இரும்புச்சத்து குறைபாடு, செம்புச்சத்து குறைபாடு(Copper), புரதச்சத்து குறைபாடுகளும் முடியை வெள்ளையாக்கலாம். 

இவ்வாறு சத்து குறைபாட்டினால் வரும் வெள்ளை முடியானது, அந்த சத்துகளை நாம் கொடுக்கும்போது கருப்பாக மாறும். சில வகை மாத்திரைகளை உட்கொள்வதும் முடியை வெள்ளையாக்கலாம்.
 (எ.கா: Chloroquine, Phenylthiourea, Triparanol போன்ற மருந்து வகைகள்.) புகைப்பிடிப்பதாலும் சிலருக்கு இளநரை ஏற்பட காரணமாக இருக்கலாம்.

இப்போதைய இளைஞர்கள், மாணவர்கள், ஹைலைட்ஸ், ப்ரவுன், என முடியில் வெரைட்டி காட்டத் துவங்கி விட்டார்கள். உடையில் இருக்கும் வண்ணம் முடியிலும் வர வேண்டும் என உடை நிற ஷேடுகளை பயன்படுத்துகிறார்கள்.

 ஹேர் டை என்பது கருப்பு நிறம் மட்டும்தான். இளநரை மற்றும் நாற்பது வயதுக்கு மேல் தோன்றும் வெள்ளை முடி பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் ஹேர் டை தான் பயன்படுத்துவார்கள். 

டையில் அமோனியம் மற்றும் பெராக்சைடு கலக்கப்பட்டிருக்கும். ஹெவி டைக்காக கொஞ்சம் PPD சேர்த்திருப்பார்கள்.Para phenylene diamine என்பதின் சுருக்கம்தான் PPD.

 டை உபயோகிப்பவர்களுக்கு பொதுவாக அலர்ஜி ஏற்படுத்தும் காரணியாக இருப்பது இதுதான். 

பொதுவாக பாதுகாப்பு கருதி PPD-யின் அளவு டையில் 2% க்கு குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. 

ஆனால், நடைமுறையில் இது எந்தளவுக்கு எல்லா நிறுவனத்தின் தயாரிப்புகளிலும் பின்பற்றுகிறார்கள் என்பது சந்தேகமே. 

முடியின் இயற்கை வண்ணத்தை மாற்ற பயன்படும் இந்த ரசாயனக் கலவைகளை அடிக்கடி நாம் பயன்படுத்துவது நம்மை ஆபத்தில் கொண்டு நிறுத்தும்.

.''டை பயன்படுத்துவதால்... அலர்ஜியில் ஆரம்பித்து, ஹார்மோன் சமச்சீரின்மை, புற்றுநோய் வரை ஆபத்து நேரலாம்''

டைகளில் இருக்கும் பினலின்டயமின், அமோனியா, ஹைட்ரஜன் பெராக்ஸைடு போன்ற பல ரசாயனப் பொருட் கள்... நம் ஹார்மோன்களைச் சரியாக செயல் படவிடாமல் தடுக்கின்றன. 

இதன் காரணமாக வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு, ஒவ்வொரு வரின் உடல்நிலையைப் பொறுத்து ஒவ்வொரு விதமான பாதிப்பு ஏற்படும்.

 அலர்ஜி, உடம்பின் எதிர்ப்பு சக்தி குறைவது, கேன்சர், சிறுநீர்ப்பை கேன்சர் என்று பல பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மீசைக்கு டை அடிப்பதும் அதிகமாகவே இருக்கிறது. 

அப்படி அடிக்கும்போது சுவாசத்தின் வழியாக உள்ளே சென்று நுரையீரலை பாதிக்கக்கூடும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை. 

அதேசமயம், மீசைக்கு கீழே இருக்கும் தோல் வழியாகவும் அது உடலில் ஊடுருவும் என்பதை மறக்கவேண்டாம்''

இயற்கை டை!

அவுரி இலை - 50 கிராம், 
மருதாணி இலை - 50 கிராம், 
வெள்ளை கரிசலாங்கண்ணி - 50 கிராம்,
கறிவேப்பிலை - 50 கிராம்,
பெருநெல்லி (கொட்டை நீக்கியது) - 10 எண்ணிக்கை... 

இவை அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும். 
ஒரு மடல் சோற்றுக் கற்றாழையை மிக்ஸியில் அரைத்து (சிறுசிறு துண்டுகளாகவும் வெட்டி சேர்க்கலாம்). அரைத்து வைத்திருக்கும் அவுரி கலவையுடன் சேர்த்து, 
ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மிதமான தீயில் காய்ச்ச வேண்டும். 

கொதி நிலைக்கு வரும்போது இறக்கி வடிகட்ட வேண்டும். 
இதை பத்திரப் படுத்தி வைத்து, தினசரி தலைக்கு எண்ணெய் பூசுவது போல பயன்படுத்தலாம். 
நாளடைவில் முடியின் நிறம் மாறுவதோடு புதிதாகவும் முடி வளரும்.

சு. சிவசுப்பிரமணியம்
செயலாளர்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்.

சனி, 19 ஜனவரி, 2019

நல்ல தேனை கண்டறிவது

நல்ல தேனை கண்டறிவது எப்படி?
************************************************
தேன், நினைத்தாலே இனிக்கும் இயற்கையின் அற்புதம். தேனை விரும்பாதவர்கள் குறைவு. கெட்டுப்போகாத ஒரே உணவுப் பொருள் என்றால் அது தேன் மட்டும்தான். பழங்காலம் தொட்டே மருந்திலும், விருந்திலும் தவறாமல் இடம்பெற்றிருந்த தேனில் கலப்படம் என்பதும் ஹைதர்காலத்து பழைய சமாச்சாரம்தான்.

இன்றைய வர்த்தகமயமான சூழலில் வளர்ப்புத் தேனீக்கள் மூலம் கிடைக்கும் தேன் பெருகிவிட்டது. கூடவே கலப்படமும் இவற்றில் நிறையவே நடப்பதாகக் கூறப்படுகின்றது. இவை கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்டு வண்ணமயமான ஸ்டிக்கர்களுடன் கணஜோராக காட்சியளிக்கின்றன.

கிட்டத்தட்ட எல்லா பாட்டில்களின் லேபிளின் மீதும் 'ஒரிஜுனல் நேச்சுரல் ஹனி' என்றே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சூப்பர்மார்க்கெட்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தத் தேனின் பளபளப்பான நிறம் நம் அனைவரின் கண்களையும் ஈர்க்கவே செய்கின்றது. ஆனால், எளிதில் கலப்படம் செய்யக்கூடிய பொருட்களில் முதலிடம் வகிப்பது தேன்தான்.

வணிக நோக்கத்துக்காக சில நிறுவனங்கள் தேனில் வெள்ளை சர்க்கரையைக் கலந்து விற்பனை செய்து வருகின்றன. தங்களது வியாபாரத்தைப் பெருக்க, இந்திய உணவுத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை தனியார் நிறுவனங்கள் சாமர்த்தியமாக மீறுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன.

இதுபோன்ற கலப்படங்களின் விளைவாக தேனுக்கான மகத்துவமும், மருத்துவ குணமும் இல்லாமல் போகிறது. மேலும் தேனில் மற்ற சில கலப்படங்களும் நடக்கின்றன. இந்தக் கலப்படங்களைக் கண்டறிவது எப்படி, நல்ல தேனை எப்படிக் கண்டுப்பிடிப்பது போன்ற விஷயங்களை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும்.

* ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு சொட்டுத்தேனை விடவும். தண்ணீரில் அது கரைந்தால், அது கலப்படம் செய்யப்பட்டது. கரைந்து போகாமல் நேராக பாத்திரத்தின் கீழே சென்று தங்கினால், அது சுத்தமான தேன்.

*சுத்தமான காட்டன் துணியை தேனில் நனைத்து, அதை எரியும் தீக்குச்சியில் காண்பித்தால், நன்றாக சுடர்விட்டு பற்றி எரியும். அப்படி எரிந்தால் அது சுத்தமானது.

* சிறிதளவு தேனை எடுத்து வாணலியில் சூடு செய்தால், அதன் அடர்த்தி குறைந்து, உருகிவிடும். பின்னர் அடுப்பை அணைத்து விடவேண்டும். சுத்தமானதாக இருந்தால், சில மணி நேரங்களானதும், பழைய அடர்த்தியை அடைந்துவிடும். கலப்படம் செய்யப்பட்டதாக இருந்தால், இழந்த அடர்த்தியைத் திரும்பப் பெறாது.

* தேனை கண்ணாடி ஜாரில் ஊற்றி, சில மணிநேரம் வைத்திருக்க வேண்டும். சுத்தமான தேனாக இருந்தால், அடர்த்தி ஒரே சீராக இருப்பதுடன், நிழல் போன்ற அடுக்குப் படலம் ஏற்படாது. தேனின் நிறம் ஒரே சீராக இருக்கும். கலப்படம் செய்த தேனின் அடர்த்தி மாறுபடும்.

* சுத்தமான தேனுக்கு அடர்த்தி அதிகம். அதை ஸ்பூனில் எடுத்து கிண்ணத்தில் விட்டால், மெல்லிய நூல் இழை போல் இறங்கும். கலப்படம் செய்யப்பட்ட தேன், சொட்டு சொட்டாக வடியும்.

* சுத்தமான தேனை ஒரு பாத்திரத்தில் இருந்து மற்றொரு பாத்திரத்துக்கு மாற்றினால், அதன் அடர்த்தி காரணமாக உடனே ஒட்டாமல் குமிழ் போல பரவி, பாத்திரத்தின் வடிவத்துக்கு ஏற்ப தேன் சம நிலை பெற சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். கலப்படம் மிகுந்த தேனை பாத்திரத்தில் ஊற்றினால், உடனேயே தண்ணீர் போல பாத்திரத்தில் சமநிலையில் இருக்கும்.

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்

நன்றி : விகடன் செய்திகள்