கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் சார்பில் உதகை பெத்தலகேம் பெண்கள மேல்நிலைப்பள்ளியில்குடிமக்கள் நுகர்வோர் மன்றம் செயல்படுத்தி வருகின்றது. இதன் மாதாந்திர கூட்டம் பள்ளியில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சிவசுப்பிரமணியம் பேசும்போது நுகர்வோர் விழிப்புணர்வுமக்கள் மத்தியில் அதிகரிக்க நுகர்வோர் மன்ற மாணவிகள் முயற்சிகள் மேற்க்கொள்ள வேண்டும். நாம்உபயோகப்படுத்தும் பொருட்கள் உண்மையிலேயே தேவைதானா என்பதையும் தரமானது தான என்பதையும் ஆய்வுசெய்து பயன்படுத்த வேண்டும். நாம் பயன்படுத்தும் ஷாம்பு, பேஸ்ட்(பற்பசை), உள்ளிட்டவற்றால் பல பாதிப்புகள்மக்களிடையே ஏற்படுத்துகின்றது. மேலும் பிளாஸ்டிக் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மரங்கள் வளர்க்கும்போது இயற்கைக்கு சாதாகமான மரங்களை வளர்க்க வேண்டும். அழகிற்காக வளர்க்க கூடியவெளிநாட்டு தாவரங்களால் இயற்கை பாதிப்பு ஏற்படும் என்பதும் குறிப்பிடதக்கது. நுகர்வோர் சார்ந்த குறைகளைசம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். அல்லது மாநில நுகர்வோர் சேவை மையத்தில் 04428592828 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். முதல்வரின் தனிப்பிரிவிற்காக துவங்கப்பட்டுள்ள இணைய வழியில் புகார்அனுப்பலாம் என்றார். உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்தனன் பேசும்போதுமாணவர்களிடையே தற்போது பரவி வரும் விரைவு உணவுகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றது. இதனால்பாரம்பரிய உணவுகள் பயன்கள் குறித்து அறியாமல் ஊட்டச்சத்து உணவுகளை தவிர்க்கின்றோம். இதனால் பல்வேறுநோய்களுக்கும் ஆளாகும் நிலை உள்ளது. மாணவ பருவத்தில் உணவு பழக்கத்தில் கண்டிப்புடன் இருப்பது எதிர்காலவாழ்வுக்கு அடித்தளமாக அமையும் என்றார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சோலூர் கனேசன் பேசும்போதுமாணவர்கள் வேலை என தேடி அலைவதால் எளிதில் கிடைக்கும் வேலை கல்வி என அரசு அங்கீகாரம் இல்லாதபல படிப்புகளை தேடி ஓடுகின்றனர். இதனால் ஏழை எளிய மக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அரசுஅங்கீகாரம் பெற்றுள்ளதா என ஆராய்ந்து அதன் மூலம் படிப்புகளை தேர்வு செய்வது அவசியம் என்றார்.
CCHEP Ooty Bethalgem school CCC meeting 4.11.2015
நுகர்வோர்மன்ற மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. இதில் குறு நாடகம், கவிதை, செயல்விளக்கம் நடனம்ஆகியன நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் குணசீலி,ஆசிரியர்கள் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக