பயன்படுத்தும் முறை:
தரமான தேயிலைத் தூளை ஒரு கோப்பைக்கு இரண்டு டீஸ்பூன் வீதம் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கோப்பை தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த தண்ணீரில் தேயிலைத் தூளைப் போட்டு மூடி வைத்து உடனே அடுப்பை அனைத்து விட வேண்டும். ஓரிரு நிமிடம் கழித்து அதை வடிகட்டி, தேவைக்கு சர்க்கரையும் பாலும் சேர்த்துக்கொள்ளவும்.
கூடுமானவரை பால் சேர்க்காமலே இது உட்கொள்ளப்படுகிறது. வரக்காபி [டீ]என்பதுபோல இது 'பிளெய்ன் டீ' யாக பால் இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படுவதே சிறப்பு. இது 'டிப் டீ' எனப்படும் டீ பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும்.
டீ-யை நேரிடையாக கொதிக்க வைக்கத் தேவையில்லை. அப்படிச் செய்யும்போது கசப்புத் தன்மை அதிகரிக்கிறது. 80-85 டிகிரி வெப்பநிலைக்கு கொதிக்க வைக்கப்பட்ட நீரில் டீ பையை சுமார் 1-3 நிமிடம் மூழ்க வைத்தாலே போதும்.இதை சூடாகவோ அல்லது குளிர வைத்தோ அருந்தலாம்.
சுவைக்குத் தேவையானால் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து அருந்தலாம். விருப்பமானவர்கள் வாசனைக்கு புதினா இலைகள், எலுமிச்சை அல்லது இஞ்சி சேர்த்தும் பருகலாம். ஒருமுறை சாறு இறக்கிய பிறகு வேண்டுமானால் மீண்டும் கொதிநீர் சேர்த்து இரண்டாவது முறையும் வடிக்கட்டி குடிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக