வியாழன், 17 செப்டம்பர், 2015

பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் – தலைமையாசிரியர்கள் கூட்டம்

பெறுனர்
முதன்மை கல்வி அலுவலர் அவர்கள்,
உதகை.

பொருள்: பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம்
       தலைமையாசிரியர்கள் கூட்டம் நடத்த வேண்டும்
   அறிவுறுத்த கேட்டல் சார்பாக.

அய்யா அவர்களுக்கு,
வணக்கம், தமிழ்நாடு அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்கி செயல்படுத்தி வரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளதுநீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் பெயரளவில் துவங்கப்பட்டு செயல்படாமல் உள்ளது சில பள்ளிகளில் மட்டும் இம்மன்றம் செயல்பட்டு வருகின்றது.
இதனால் நுகர்வோர் விழிப்புணர்வு என்பது மக்களிடையே சென்று சேராமல் உள்ளதுபள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் செயல்படுத்தினால் பெருமளவு நுகர்வோர் விழிப்புணர்வு மக்களிடையே செல்ல வாய்ப்பு உள்ளது. இதுவரை குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்காத பள்ளிகளில் மன்றம் துவங்க உரிய அறிவுறை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
நுகர்வோர் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்தாங்கள் பளளி தலைமை ஆசிர்யர்கள் கூட்டம் நடத்தும்போது தகவல்தெரிவித்தால் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்குவது, செயல்படுத்துவது, கூட்டம் நடத்துவது, மாதாந்திர செயல்பாடுகள், மாணவர்களின் பங்களிப்பு உள்ளிட்டவை குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்.

இப்படிக்கு

சு. சிவசுப்பிரமணியம் தலைவர்
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

உறுப்பினர் மின்வாரிய நுகர்வோர் குறை தீர் மன்றம். TNEB நீலகிரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக