வெள்ளி, 6 டிசம்பர், 2019

பந்தலூரில் தேசிய கல்வி நாளை முன்னிட்டு கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன சார்பில்
பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம் வரவேற்றார்.

பந்தலூர் அரசு மருத்துவமனை சித்தா மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி, பந்தலூர் கிளை நூலகர் அறிவழகன், கால்நடை மருத்துவர் பாலாஜி,  மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌஷாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் பேசும்போது 
நாம் கற்கும் கல்வி நமக்கு நமது சமுதாயத்திற்கு வழிகாட்டுவதாக அமைய வேண்டும்.

கல்வியில் இருந்து 
நேர்மை, விடமுயற்சி, தன்னம்பிக்கை, திறமை, தோல்விகளில் இருந்து அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் மற்றும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நடைமுறைகள் ஆகியன கற்றுக்கொள்ள வேண்டும்.

எந்தப் பணி மேற் கொண்டாலும் அதை சிறப்பா செய்யனும், அரைகுறையாக செய்யக்கூடாது. சவால்களை கண்டு அஞ்சாமல் அவற்றை சரியான வழிமுறையில் எதிர்கொள்ள வேண்டும்.

வீட்டில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டுமே தவிர அதை நினைத்து வருத்தப்படக்கூடாது. 

நம்முடைய தகுதிகளை பார்த்தே வேலை வாய்ப்புகளை தருகிறார்கள். 

பேசுதல், சொல்லுவதை மனதில் பதிய வைத்தால், பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல் உட்பட
போட்டி சூழலில் இது போன்ற திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும்.

இளைஞர்களின் வேலைவாய்ப்பு மேம்படுத்தும் விதமாக
ஸ்கில் இந்தியா என்கிற திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.

வேலை தேடுவதை விட
வேலையை உருவாக்குபவர்களாக உருவாக அரசுகள் பல்வேறு பயிற்சிகள் வழங்குகிறது.

கல்வி கற்பதன் மூலம்
சுய வேலை வாய்ப்பு 
மற்றும் தொழில் முனைவோர்களாக இருக்க வேண்டும்.  

இதன்முலம் தன்னுடைய பொருளாதார மேம்பாட்டை உருவாக்கி கொள்ள வேண்டும்.

புரிந்து படித்தால் மூலமாக எளிதில் தேர்வுகளில் வெற்றி பெறமுடியும்.
 
புத்தகங்கள், பத்திரிக்கைகள் படியுங்கள், கேள்வி கேளுங்கள், நண்பர்களோடு நல்ல கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். 

சமூக திறன்கள்  வளர்த்துக் கொண்டு போட்டி நிறைந்த உலகில் வெற்றியாளராக உருவாக்க வேண்டும் என கூறினார். 

நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கான நூலக அடையாள அட்டை வழங்கப்பட்டது.

பள்ளி தலைமையாசிரியர் சகோதரி செலின் நன்றி கூறினார்.

பள்ளி மாணவியர்கள் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சேரம்பாடி அரசு மேல்நிலை பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு மேல்நிலை பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்,  அரசு வட்டார சுகாதார நிலையம்,  பந்தலூர் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு, பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம்,  ஷாலோம் சரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர்  முனைவர்  கிருஷ்ணதாஸ்    தலைமை தாங்கினார் 

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், ஷாலோம் சரிட்டபிள் டிரஸ்ட் இயக்குனர் விஜயன் சாமுவேல், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் முத்துசாமி வரவேற்றார்.
வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பேசும்போது. டெங்கு காய்ச்சல் ஏடிஸ் எனும் கொசுவால் பரவுகிறது.  

இது பகலில் மட்டும் கடிக்கும் சுமார் 500 மீட்டர் தூரம் பறக்கும் இந்த கொசு அந்த எல்லைக்குள் யாருக்கேனும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ள கொசு கடிக்கும்போது டெங்கு தாக்குகிறது.  

இதற்க்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  டெங்கு பாதிப்பு ஏற்பட்ட உடன் ரத்த உறையும் தன்மை இழந்து விடுகிறது.  

எனவே இரத்தம் கசியும் நிலை ஏற்படாமல் பார்த்து கொள்ளவும், ஓ ஆர் எஸ் கரைசல் தண்ணீர் கொடுக்க வேண்டும்.  

ஏடிஸ் கொசு சுத்தமான தண்ணீரில் உருவாகி வாழுவதால்,  வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளுதல் வேண்டும்.  

ஏடிஸ் கொசு பகலில் கடிக்கும் எனவே பகலில் மாணவர்கள் அதிக நேரம் இருக்கும் பள்ளிகளை சுத்தமாக வைக்க வேண்டும்.  

மாணவர்கள் தேர்வு செய்து சுகாதார காவலர்கள் அட்டை வழங்கப்படும்.  மாணவர்கள் தங்கள் குடியிருக்கும் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

பந்தலூர் அரசு மருத்துவமனை சித்தா மருத்துவர் புவனேஷ்வரி பேசும்போது டெங்கு காய்ச்சல் வந்தால் இரத்த தட்டுகள் குறையும். அவற்றை அதிகரிக்க நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது.  

காய்ச்சல் வந்தால் ஒரு நாளைக்கு 3 வேளை 50 மில்லி அளவில் குடிக்க வேண்டும்.  மாணவர்கள் 30 மில்லி குடிக்கலாம்.  காய்ச்சல் இல்லாதவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை குடித்தால் போதும். 

 அரசு சித்தா பிரிவில் டெங்கு  பதித்தவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.  மாணவர்கள் மக்களிடம் டெங்கு காய்ச்சல் குணமாகும் முறைகளை எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

தொடர்ந்து மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஆசிரியர் கோபு நன்றி கூறினார்