செவ்வாய், 11 டிசம்பர், 2018

கூடலூர் இளையோர் விழிப்புணர்வு

இந்திய அரசு நேரு யுவ கேந்திரா, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன இணைந்து

இளையோர் நல்லெண்ண கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி கூடலூர் PWITI இல் நடைபெற்றது.

 நிகழ்ச்சிக்கு நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார்.

பயிற்சி மைய முதல்வர் ஷாஜி ஜோர்ஜ் வரவேற்றார். 

நுகர்வோர் மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், நேரு யுவ கேந்திரா உதவியாளர் கேசவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 நேரு யுவ கேந்திரா நிகழ்ச்சி அலுவலர் சரஸ்வதி பேசும்போது இளையோர்கள் பிரச்சனைகளை சந்திக்க தைரியம் தேவை இவர்களுக்குள் நல்ல எண்ணங்கள் சிந்தனைகள் இருக்க வேண்டியது அவசியம்.
 நேரு யுவகேந்திரா இளையோர் நமன்றகளுக்கு வழிகாட்டியாக இருக்கும்.  விளையாட்டு. யோகா போன்றவை மனதை வலுப்படுத்த கூடியது என்றார்.

போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பூராஜன் பேசும்போது சாலை விபத்துக்களில் அதிகமாக உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன இவற்றை தடுக்க வேண்டும்.

 நீலகிரி மாவட்டத்தில் 35 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க வேண்டும் என்றார்.
காசிகா ias பயிற்சி மைய நிறுவனர் சுரேஷ், ஓய்வு பெற்ற ஆசிரியர் சத்தியநேசன் உள்ளிட்டோர் பேசினார்கள்.

 நிகழ்ச்சியில் பயிற்சி மைய ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் சத்தியசீலன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக