வெள்ளி, 6 டிசம்பர், 2019

சேரம்பாடி அரசு மேல்நிலை பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு மேல்நிலை பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்,  அரசு வட்டார சுகாதார நிலையம்,  பந்தலூர் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு, பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம்,  ஷாலோம் சரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர்  முனைவர்  கிருஷ்ணதாஸ்    தலைமை தாங்கினார் 

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், ஷாலோம் சரிட்டபிள் டிரஸ்ட் இயக்குனர் விஜயன் சாமுவேல், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் முத்துசாமி வரவேற்றார்.
வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பேசும்போது. டெங்கு காய்ச்சல் ஏடிஸ் எனும் கொசுவால் பரவுகிறது.  

இது பகலில் மட்டும் கடிக்கும் சுமார் 500 மீட்டர் தூரம் பறக்கும் இந்த கொசு அந்த எல்லைக்குள் யாருக்கேனும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ள கொசு கடிக்கும்போது டெங்கு தாக்குகிறது.  

இதற்க்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  டெங்கு பாதிப்பு ஏற்பட்ட உடன் ரத்த உறையும் தன்மை இழந்து விடுகிறது.  

எனவே இரத்தம் கசியும் நிலை ஏற்படாமல் பார்த்து கொள்ளவும், ஓ ஆர் எஸ் கரைசல் தண்ணீர் கொடுக்க வேண்டும்.  

ஏடிஸ் கொசு சுத்தமான தண்ணீரில் உருவாகி வாழுவதால்,  வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளுதல் வேண்டும்.  

ஏடிஸ் கொசு பகலில் கடிக்கும் எனவே பகலில் மாணவர்கள் அதிக நேரம் இருக்கும் பள்ளிகளை சுத்தமாக வைக்க வேண்டும்.  

மாணவர்கள் தேர்வு செய்து சுகாதார காவலர்கள் அட்டை வழங்கப்படும்.  மாணவர்கள் தங்கள் குடியிருக்கும் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

பந்தலூர் அரசு மருத்துவமனை சித்தா மருத்துவர் புவனேஷ்வரி பேசும்போது டெங்கு காய்ச்சல் வந்தால் இரத்த தட்டுகள் குறையும். அவற்றை அதிகரிக்க நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது.  

காய்ச்சல் வந்தால் ஒரு நாளைக்கு 3 வேளை 50 மில்லி அளவில் குடிக்க வேண்டும்.  மாணவர்கள் 30 மில்லி குடிக்கலாம்.  காய்ச்சல் இல்லாதவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை குடித்தால் போதும். 

 அரசு சித்தா பிரிவில் டெங்கு  பதித்தவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.  மாணவர்கள் மக்களிடம் டெங்கு காய்ச்சல் குணமாகும் முறைகளை எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

தொடர்ந்து மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஆசிரியர் கோபு நன்றி கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக