புதன், 18 செப்டம்பர், 2019

பொது குழு கூட்டம் 2019

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின்
பொது குழு கூட்டம்  2019 ஆகஸ்ட் 18 அன்று  பந்தலூரில் நடைப்பெற்றது.

கூட்டத்திற்கு வந்தோரை  இணை செயலாளர் பொன். கனேசன் வரவேற்றார்.
கூட்டத்திற்கு தலைமை  தலைவர்  காளிமுத்து  தலைமை தாங்கினார்.   கடந்த 2018 / 19 ம் ஆண்டின்  செயல்பாடுகள், மற்றும்  எதிர்கால  செயல்பாடுகள் குறித்து  பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம் பேசினார்.   வரவு செலவு அறிக்கையின் பொருளாளர் ஜெயசந்திரன் சமர்ப்பித்தார்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள்

நன்றி தெரிவித்தல்

            இதுநாள் வரை அமைப்பின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் ஆதரவு அளித்து பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தந்த  அரசு துறைகள் மற்றும் தொடர்ந்து அமைப்பின் செயல்பாட்டிற்கு ஆதரவு தந்து உதவும் சமூக நல அமைப்புகள், நுகர்வோர் கூட்டமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், பத்திரிக்கையாளர்கள், மற்றும் தன்னார்வ அமைப்புகள் அனைத்திற்கும் அமைப்பின் பொது குழு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அமைப்பின் செயல்பாடு அறிக்கை மற்றும் பொருளாளர் அறிக்கைகள் எற்றுக்கொள்ளுதல் என தீர்மாணிக்கப்பட்டது.

அமைப்பின் செயல்பாடுகள் குறித்த தீா்மாணங்கள்

1.      அமைப்பின் செயல்பாடுகளை மேம்படுத்துதல், புதிதாக நுகர்வோர் ஆர்வலர்களை உருவாக்குதல் மற்றும் நுகர்வோர் அமைப்புகளை உருவாக்குதல் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.

2.      பள்ளி கல்லூரிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை வழிநடத்தி  நுகர்வோர் சுற்றுச்சூழல் மற்றும் இதர விழிப்புணர்வு பணிகளை மேற்க்கொள்ளுதல் மற்றும் நுகர்வோர் மன்றங்கள் அமைக்காத பள்ளிகளில் நுகர்வோர் மன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்தல் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.

3.      கல்வி வழிகாட்டலுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் நடத்தி சரியான கல்வி பெற வழிகாட்டுதல் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.

4.      இரத்த தான முகாம் நடத்துதல், இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்துதல், இலவச மருத்துவ முகாம் நடத்துதல் அதற்கான சுகாதார துறை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுதல் என தீர்மாணிக்கப்பட்டது.

5.      உறுப்பினர்கள் சந்தா மற்றும் நன்கொடைகள் மூலம் நிதி ஆதாரம் பெருக்குதல் என தீர்மாணிக்கப்பட்டது.





அரசு துறைகள் சார்பான   கோரிக்கைகள் சார்ந்த தீர்மாணங்கள்

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை

1.      நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாகவும், மழை அதிகம் பொழியும் மாவட்டமாகவும் உள்ளது.  இதனால் இங்கு அதிக அளவு எரிபொருள் தேவை உள்ளது.  இதனால் மலை மற்றும் மழை மாவட்டமான நீலகிரிக்கு கூடுதல் மண்ணென்னை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாதந்தோறும் வழங்கும்  மண்ணென்னை  அளவு குறித்து தகவல்  முன்கூட்டி தெரியபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளல்.

2.      உணவு கலப்படம் மற்றும் கலாவதி உணவுகள் குறித்த முறையான ஆய்வுகளை உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொள்வதில்லை.  இதனால் பல இடங்களில் காலாவதி உணவுகள் அதிகரித்து காணப்படுகின்றது.  இதுகுறித்து உணவு துறையினர் மூலம் உரிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டல்

3.      நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளர்கள் முதல் சிறு குறு விவசாயிகள் ரேசன் அரிசியை மட்டுமே நம்பியுள்ளனர்.  இவர்களுக்கு கடைகளில் அரிசி வாங்கி பயன்படுத்தும் வழக்கம் மிகவும் குறைவே.  எனவே மாதந்தோறும் முழு அளவு அரிசி ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்வதுடன் .  கூடலூர் பந்தலூர்  பகுதியில் அதிக அளவு பச்சரிசி பயன் படுத்துகின்றனர்.  எனவே  பச்சரிசி  ரேசன் கார்டுக்கு சுமார் 5 கிலோ வரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

4.      அதுபோல கோதுமை அதிக அளவு தேவை படுகின்றது.  முன்பு ஒரு கிலோ கோதுமை ரூபாய் 7.50 வீதம் 5 கிலோ வரை வழங்கப்பட்டது.  பலரும் பயன் பெற்று வந்தனர்.  தற்போது அரிசிக்கு பதில் கோதுமை என்பதால் பலருக்கு அரிசியும் பற்றாக்குறை நிலவுகின்றது.  எனவே முன்பு போல் கோதுமை  தனியாக ஒரு கிலோ ரூபாய் 10/-வீதம் குறைந்தபட்சம் 5 கிலோ வரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

5.      ஸ்மார்ட் அட்டைகள் தொலைந்தவர்கள் புதிய அட்டை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.  இதனால் ரேசன் பொருட்கள் வாங்கவும் இயலாமல் அவதிப்படுகின்றனர்.  எனவே மாவட்ட அளவில்  தொலைந்த ஸ்மார்ட் கார்டிற்கு பதில் புதிய ஸ்மார்ட் கார்ட் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
6.           
7.      நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தின் தலைவர் பதவி காலியாக உள்ளதால் நுகர்வோர் சார்ந்த வழக்குகள் தேங்கி வருகின்றன.  இதனால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டபடியான தீர்வு உரிய காலத்தில் பெற இயலாமல் நுகர்வோர்கள் பாதிக்கப்படுகின்றனர்.  எனவே காலியாக உள்ள தலைவர் பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.



சுகாதார துறை

1.      பந்தலூர் கூடலூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு சிறப்பு பிரிவுகள் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தமைக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.  அதுபோல

2.      கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் தற்போது புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றது.  இதனால் பலரும் நோயினை கண்டிறிய முடியாமல் முற்றிய நிலையில் சிகிச்சை பெற இயலாமல் பாதிக்கப்பட்டு கடும் அவதிக்குள்ளாகி இறந்து வருகின்றனர் என்பது வேதனையானது.

3.      எனவே கூடலூர் பந்தலூர் அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை பிரிவும், சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் டயாலிசீஸ் பிரிவும் தொடங்கி செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

4.      அதுபோல பந்தலூர் மற்றும் இரத்த பரிசோதகர்கள் பற்றாக்குறை நிலவுகின்றது.  பந்தலூர் அரசு மருத்துவமனையில் தற்போது காசநோய்  டெக்னீசியன் தான் அனைத்துவித இரத்த பரிசோதனை மேற்க்கொள்கிறார்கள்.  ஆனால் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை ரிப்போர்ட் கிடைப்பதில்லை.  இதனால் நோயாளிகள் பாதிக்கும் நிலையும் உள்ளது.  கூடலூர் அரசு மருத்துவமனையிலும் இரத்த வங்கி மற்றும் உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் என பல்வகை இரத்த மாதிரிகள் பரிசோதிக்க ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார்.  எனவே கூடுதல் இரத்த பரிசோதகர் கூடலூர் மற்றும் பந்தலூர் அரசு மருத்துவமனையில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5.      எனவே பந்தலூர் அரசு மருத்துவமனையில்   அவசர  சிகிச்சை  மேற்க்கொள்ள தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  குடும்ப கட்டுபாட்டு அறுவை சிசிக்சை ஏற்கனவே மேற்கொண்டது போல் மாதம் இரு முறை மேற்க்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6.      மாத்திரைகள் வழங்கும்போது மாத்திரைகளுக்கான சீட்டுகள் வழங்க வேண்டும்

7.      பிரசவம் பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தாய்மார்களுக்கு ஸ்கேன் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

8.      எக்ஸ்ரே இயந்திரம் நவீனமயமானதை வாங்கி கொடுத்து மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9.      அவசர சிகிச்சைகளுக்கு இதர மருத்துவமனைகளுக்கு அனுப்புவதற்கான காரணங்களை ஆய்வு செய்து அக்குறைகளை நிவர்த்தி செய்து இங்கேயே தரமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10.  பந்தலூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






நெடுஞ்சாலை துறை சார்பான      கோரிக்கைகள்

பந்தலூரில் இருந்து கேரளா செல்லும் வகையில் கிளன்ராக்  வழியாக வனப்பகுதியில் சென்று கேரளா மாநிலம் முன்டேறி பகுதியில் இணையும் சாலை உருவாக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில இணைப்பு பகுதியாக உள்ளது.  இதில் கீழ்நாடுகானி பகுதியில் செல்லகூடிய தமிழ்நாடு கேரளா இணைப்பு சாலை சமீபத்தில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக  சாலை பழுதடைந்து உள்ளது.  அடிக்கடி சாலை துண்டிக்கப்படுவதால்  மக்கள் போக்குவரத்துக்கு சிரம்ப்படும் நிலை உருவாகியுள்ளது. 

எனவே மாற்று நடவடிக்கையாக பந்தலூர் கிளன்ராக் பகுதியில் இருந்து கேரளா மாநிலம் முன்டேறி வழியாக செல்லும் சாலை தற்போது சிறிய நடைபாதையாக உள்ளது.  இந்த சாலையை அகலப்படுத்தி பெரிய வாகணங்கள் செல்லும் வகையில் தார்சாலையாக மாற்றி தந்தால் இருமாநில போக்குவரத்துக்கு உதவியாக அமையும்.  இந்த சாலை அமைக்க ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது.

எனவே மேற்படி சாலையை உருவாக்கி இருமாநில போக்குவரத்துக்கு  உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

பந்தலூர் உப்பட்டி பொன்னானி வழியாக பாட்டவயல் செல்லும் சாலையில் ஏராளமான வாகணங்கள் வந்து செல்கின்றன.  இச்சாலையை அகலப்படுத்தி போக்குவரத்துக்கு உதவியாக அமைத்து தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


சாலைகளில் பல்வேறு இடங்களில் மண்சரிவுகள் சாலை சேதங்கள் ஏற்பட்டள்ளது.  இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று சாலைகள் உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக