புதன், 18 செப்டம்பர், 2019

நூலக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி

பந்தலூர்
பந்தலூர் தாலுக்கா அத்திக்குன்னா அரசு உயர்நிலை பள்ளியில்  மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பந்தலூர் கிளை நூலகம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் அத்திக்குன்னா அரசு உயர் நிலைப்பள்ளியில் புத்தக வாசிப்பு மற்றும் நூலக விழிப்புணர்வு முகமும், 150 மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவும் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அமர்நாத் தலைமை தாங்கினார்.

பள்ளியின் முன்னாள் மாணவரும், கோவை அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியருமான செந்தூரன் பேசும்போது  கல்வியோடு மாணவர்கள் விளையாட்டு, பொது அறிவு ஆகிவற்றை வளர்த்து கொள்ள வேண்டும்.  முன்பெல்லாம் மாணவர்கள் பல்வேறு புத்தகங்களையும், தினசரி செய்தித்தாள்களை படித்து தான் எங்களின் அறிவையும், நாட்டுநடப்புகளை அறிந்து கொண்டோம்.  ஆசிரியர்களின் மனதில் இடம் பிடித்தவர்களால் பலரும் சாதனையாளர்களாக உருவாகி உள்ளனர்.  ஆசிரியர்களை, பெரியவர்களை மாணவர்கள் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். போட்டிகள் நிறைந்த உலகில் படிப்பறிவோடு, பொது அறிவு, இதர திறமைகளை வளர்த்து கொள்தல் அவசியம் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து கற்றுக்கொள்வதால் தன்னுடைய வாழ்க்கை நிலையை மேம்படுத்தி கொள்ள முடியும், நல்லவைகளை விட தீயவை அதிகம் நிறைந்த உலகில் நல்லவைகளை ஏற்று கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது  வாசிப்பு பழக்கம் மனதை வலுப்படுத்தும்,  பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் உதவும், படிப்பு அறிவு மட்டும் வேலைவாய்ப்பை தருவதில்லை,  எல்லா துறைகளிலும் போட்டி தேர்வுகள் மூலமே பணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.  எனவே போட்டி தேர்வை எதிர்க் கொள்ள மாணவர்களை தங்கள் தயார்படுத்தி கொள்ள பொது அறிவை வளர்த்து கொள்ள நூலக அட்டை வழங்கப்படுகிறது.  இவற்றை முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

கிளை நூலகர் அறிவழகன் பேசும்போது  இதுவரை 2000த்திற்கும் அதிகமான மாணவர்களை பந்தலூர் கிளை நூலகத்தில் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது.  மாணவர்கள் நூலகத்தை வெள்ளி மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து பயன்படுத்தி கொள்ள முடியும்.  
புத்தகங்கள் பல்வேறு கதைகள் பொது அறிவுகள், அறிவியல் நூல்கள், மாத இதழ்கள் என் பல்வேறு நூல்கள் உள்ளன அவற்றை எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.

150 மாணவர்களுக்கான உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நூலக உதவியாளர் மூர்த்தி,  பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக