புதன், 11 நவம்பர், 2015

காத்தாடி மட்டம் அரசுமேல்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம்

தகை அருகே காத்தாடி மட்டம் அரசுமேல்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நடைப்பெற்றது

CCHEP CCC Kathadimattam GHSS meet 29.10.15

கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி தலைமை தாங்கி பேசும்போது நுகர்வோர் விழிப்புணர்வு என்பதுமிகவும் அவசியம் நுகர்வோர் பாதிக்கப்படும்போது அதற்காக வழக்கு தொடர்ந்து இழப்பீடு பெற முடியும்எளிமையான நடைமுறைகள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் உள்ளன.  மாணவ பருவத்தில் இவற்றை தெரிந்துகொண்டு சமுதாய விழிப்புணர்வு பெற மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்றார்
https://www.facebook.com/cchepnilgiris 
 சிறப்பு அழைப்பாளராககலந்து கொண்ட  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது நாம்தேவையானவற்றை விட தேவையற்ற பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றோம்.  அதன் மூலம் வீண்செலவினமும்பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றது.  தரமான பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும்மின்சாரஉபயோக பொருட்கள் ஐஎஸ்ஐ முத்திரை கொண்டவையும் உணவுப்பொருட்கள் உணவு தர நிர்ணய துறை உரிமம்கொண்டவற்றையும் பார்த்து வாங்க வேண்டும்.  மேற்படிப்புகளில் சேரும் முன்னர் உரிய அரசு அங்கீகாரம் பெற்றநிறுவனங்களில் சேர்ந்து படிக்க வேண்டும்.  நொறுக்கு தீனிகளால் இளைய வயதிலேயே அதிக நோய்க்கு ஆளாகும்நிலை ஏற்படுகின்றது.  மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் தரமான பொருட்கள் பாதுகாப்பான பொருட்கள்வாங்குதல் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்றார்.  

கூட்டத்தில் பள்ளி தமிழ் ஆசிரியர் சிவகுமார் வரவேற்றார்முடிவில் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார் நன்றி கூறினார்

நிகழ்ச்சியில் பள்ளிஆசிரியர்கள் மற்றும்  பள்ளி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

CCHEP CCC Kathadimattam GHSS meet 29.10.15












https://www.youtube.com/watch?v=vpQQnZe2vp4&feature=youtu.be

https://www.facebook.com/cchepnilgiris

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக