CCHEP FOOD EXPO ccc Pandalur 30/10/2015 1
CCHEP FOOD EXPO ccc Pandalur 30/10/2015 2
CCHEP FOOD EXPO ccc Pandalur 30/10/2015 3
பந்தலூர். அக்,31: பந்தலூர் புனித சேவியர் மகளீர் உயர்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவிகள் சார்பில் உணவு கண்காட்சி நடத்தப் பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் செலின் தலைமை தாங்கினார் . கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், செயலாளர் கணேசன், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவிகள் ஊட்டச்சத்து உணவுகள், உணவுப் பொருட்களின் உள்ள சத்துக்கள், இயற்கை விவசாய உணவுகளின் பயண்கள், ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள், அயோடின் உப்பு உள்ளிட்ட பல தகவல்கள் கண்காட்சி மூலம் குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்.
குறிப்பாக ஜங்புட் எனப்படும் சிப்ஸ், லேஸ் விரைவு உணவுகள் உள்ளிட்ட மாணவர்கள் விரும்பி உண்ணும் பொருட்களில் உள்ள நச்சு தன்மை குறித்தும் அதன்மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.
இது மாணவர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் மற்றும் ஆரம்ப பள்ளி மாணவ மாணவிகள் பலர் கண்டு களித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மும்தாஜ், ஆசிரியர் மார்டின் பிரகாஷ் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவிகள் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக