புதன், 11 நவம்பர், 2015

தேயிலையில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :

தேயிலை கலப்படம்   இன்று கலப்படமில்லாத டீயை நீங்கள் கடைகளில் குடிக்கிறீர்கள் என்பதற்கு உத்திரவாதம் உண்டா? நிச்சயமாக இல்லை. மரத்தூள், ஏதாவது ஒரு இலைதூள், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட டீத்தூள் , இவற்றுடன் செயற்கை சாயம்                      ( இது உணவிற்காகப் பயன்படுத்தப்படுவதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, உடைகளுக்காகப் பயன்படுத்தும் சாயமாககூட இருக்கலாம்) கலந்து கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் தயாரிக்கப்படும் சாய கலவையைதான் நீங்கள் சூடாக ஐந்து ரூபாய் கொடுத்து குடித்து மகிழ்கிறீர்கள்
தேயிலையில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
மேல இருக்குற ரெண்டு கிளாசுல, நமக்கு வலதுபுறம் இருப்பது நல்ல டீ. இடது புறம் இருப்பது கலப்படமான டீ. எப்படிக்கண்டுபிடிக்கலாம்?
pls visit our webs 
 ஒண்ணுமில்லை. டெஸ்ட் பண்ணனும்னு நினைக்குற தேயிலையை ஒரு ஸ்பூனில் எடுத்துக்கோங்க.  ஒரு கண்ணாடி டம்ளரில், சாதாரண தண்ணீரை ஊற்றிவிட்டு, அதில் அந்த தேயிலையைத் தூவுங்க. நல்ல தேயிலையாயிருந்தா, தேயிலையின் சாறு மட்டும் இறங்கி தண்ணீரின் நிறம் சிறிது மட்டுமே மாறும்.
கலர் சேர்த்த கலப்பட தேயிலையாயிருந்தா, தேயிலை தண்ணீரில் மூழ்கத் துவங்கும்போதே, கலர்கள் அந்த நீரில் வர்ண ஜாலமடிக்கும். கொஞ்ச நேரத்தில், அந்த டம்ளர் தண்ணீர் முழுவதுமே, இடது பக்க டம்ளரில் உள்ளதுபோல் கலராயிடும்.
தேயிலை துளை ஈரமான ஒற்றுத்தாளில் சிறிதளவு தூவவும். செயற்கை நிறம் தானாக பிரிந்து விடும்.
வெண்மையான பீங்கான் ஓடு அல்லது கண்ணாடித் தகட்டின் மீது சிறிதளவு சுட்ட சுண்ணாம்புத்தூளைப் பரப்பவும். அதன்மேல் சிறிதளவு தேயிலைத் தூளை தூவவும். அப்போது சிவந்த நிறமோ ஆரஞ்சுநிறமோ அல்லது திரிந்த நிறத்திலான கலவையோ தோன்றுமானால் நிலக்கரித்தார் சாயமானது கலப்படம் செய்திருப்பதை உணரலாம். சுத்தமான தேயிலையில் பச்சையம் இருப்பதால் சாதாரண பசும்பொன்நிறம் மட்டுமே சிறிது நேரம் கழித்துத் தோன்றும்.

தேயிலைத் தூளில் எப்படிக் என்ன கலப்படம் செய்கிறார்கள்?
இலவம் பிஞ்சு: இலவம்பஞ்சுக் காயைப் பறித்து, காயவைத்து அரைத்து தேயிலைத் தூளுடன் கலந்து விடுகிறார்கள். இதில் தயாரிக்கப்படும் தேநீர் அடர்த்தியாக, படு ஸ்ட்ராங்காக இருக்கும். பால் எவ்வளவு தண்ணீராக இருந்தாலும் தேநீர் 'திக்’ காகவே இருக்குமாம்!
முந்திரிக் கொட்டை: முந்திரிக் கொட்டை பழமாகும் முன்னர் கடித்தால் வாய் புண்ணாகி விடும். அந்தக் கொட்டையின் தோலைக் காய வைத்து பொடியாக்கி, தேயிலைத் தூளுடன் கலக்கிறார்கள். நிறத்தைக் கூட்டுவதற்காக இதனுடன் சோடியம் கார்பனேட் ரசாயனத்தைச் சேர்க்கிறார்கள். சலவை சோப்புடன் சேர்க்கப்படும் ஆபத்தான ரசாயனம் இது!
மஞ்சனத்தி இலை - குதிரை சாணம்: மஞ்சனத்தி இலையைக் காய வைத்து அரைத்து, காய்ந்த குதிரைச் சாணத்துடன் கலந்து தேயிலையுடன் கலப்படம் செய்தால், மினுமினுக்கும் கலப்படத் தேயிலைத் தூள் ரெடி!
புளியங்கொட்டை: புளியங்கொட்​டையை லேசாக வறுத்து, ரொம்பவும் மிருதுவாக அரைக்காமல் தேயிலைத் தூள் பதத்தில் அரைத்து, தண்ணீர் சேர்த்துக் காய வைத்து (அப்போதுதான் துவர்ப்பு தெரியாமல் இருக்குமாம்) தேயிலைத் தூளுடன் கலந்து விடுகிறார்கள்!
மரத்தூள், தேங்காய் நார்: மலிவாக அல்லது இலவசமாக சில இடங்களில் கிடைக்கும் மரத் தூள்தான் கலப்படக்காரர்களின் முதல் சாய்ஸ். மரத் தூளுடன் சாயப்பட்டறைகளில் பயன்படுத்தும் ரசாயனத்தைச் சேர்த்து தேயிலைத் தூளுடன் கலக் கிறார்கள். இதுதவிர, டீக்கடைகளில் பயன்படுத்தி குப்பையில் போடும் தேயிலைத் தூளைச் சேகரித்தும் கலப்படத் தூளைத் தயாரிக்கிறார்கள்.
மரப்பொடி, பொடிசெய்யப்பட்ட உளுந்து தோல்,  நிறம் கூட்டப் பற்ற காய்ந்த இலை பருப்பின் தவிடு சாரமிறக்கிய பின் உள்ள பயனற்ற தேயிலை  போன்றவையும் கலக்க படுகிறது
ஓரிஜினல் தேயிலைத் தூளின் விலை ஒரு கிலோ 270 முதல் 310 வரை விற்கப்படுகிறது. ஆனால், கலப்படத் தேயிலைத்தூள் கிலோ 60-க்கே கிடைக்கிறது. பெரும்பாலான ரோட்டோர டீக் கடைகளில் நாம் அருந்துவது கலப்படத் தேநீர்தான். இதை அருந்தினால் சில ஆண்டுகளில் தோல் ஒவ்வாமை, செரிமானக் கோளாறு, அல்சர், மூட்டு வலி, கிட்னி பாதிப்பு, புற்று நோய் போன்றவை ஏற்பட நிறையவே வாய்ப்பு இருக்கிறது.
எது ஒரிஜினல்? தேயிலைச் செடியின் நுனியில் இருக்கும் மென்மையான இரட்டை இலை, அதன் நடுவில் இருக்கும் ஒரு மொட்டு, இவற்றை ஒட்டிக் கீழே இருக்கும் லேசாக முற்றிய இலை ஒன்று... இதைப் பறித்து சுமார் எட்டு மணி நேரம் மிஷினில் வாட்டி, ரோலரில் அரைத்தால் அதுதான் ஒரிஜினல் தேயிலைத் தூள். இதைக் குளிர்ந்த நீரில் கொட்டினால், நீரின் நிறம் மாற 10 நிமிடங்களுக்கும் மேல் ஆகும்.
உணவுப் பொருளில் கலப்படம் செய்து விற்றால், ஆயுள் தண்டனை வழங்கலாம் என்கிறது சட்டம். தேயிலையில் கலப்படம் செய்வதை தடுக்க தென்னிந்திய தேயிலை வாரியமும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அலுவகமும் முயற்சிகள் எடுத்து வருகிறது.  நாமும் எச்சரிக்கையாக இருந்தால் அலுவலர்களுக்கு உதவியாக இருந்தால் தேயிலை கலப்படத்தினை தடுக்க முடியும்.
தேயிலையில் டீயில்  கலப்படம் இருப்பது தெரிந்தால்
தென் இந்திய தேயிலை வாரியம்,  பெட்போர்ட்,  குன்னூர்.
மாவட்ட ஆட்சியர்,  மாவட்ட வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அலுவலர்,
அருகில் செயல்படும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள்
ஆகியோருக்கு தகவல் கொடுக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக